பூமியின் பாரம் தாங்கும் ஆதிசேஷன்

ஆதிசேஷன்

கசியப பிரஜாபதிக்கும் கத்துருவைக்கும் பிறந்த மூத்த புத்திரன். இவன் தனது தாய் கத்துருவை அவளின் சக்களத்தி விநதைக்குச் செய்த அக்கிரங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறி, திருக்கோகர்ணம், கந்தமாதனம், முதலிய திவ்விய க்ஷேத்திரங்களுக்கு சென்று அங்கு கடும் தவம் புரிந்து வந்தான்.

பிரம்மா இவனது தவத்தை மெச்சி, இவனுக்கு பூமியின் பாரத்தைத் தாங்கும் பொறுப்பைக் கொடுத்தார்.

அதன்பின்னர், ஈசுவரன் அருளால் விஷ்ணுவுக்கு ஆயிரம் பணா முடியுடைய சர்ப்ப-சயனமாக இருந்தான். எல்லா சர்பங்களுக்கும் ராஜா இவன்தான். (சர்ப்பம் = பாம்பு).