தண்டகாரணியம் ஆகிப்போன சென்னை!

இசுவாகுவின் மகனுக்கு தண்டன் என்று பெயர்; இவன், தன் தந்தையின் பேச்சைக் கேட்காமல் முரட்டுத்தனமாக திரிந்தான்; எனவே இவனின் தந்தை இசுவாகு, இவனை, விந்திய மலைப் பகுதிக்கு ஓடிப் போகுமாறு விரட்டி விட்டான்;
அங்கிருந்து விந்திய மலைப் பகுதிக்குச் சென்ற தண்டன், தன்னுடன் வந்தவர்களைக் கொண்டு, மதுமந்தம் என்னும் ஒரு பட்டணத்தை உருவாக்கி விட்டான்; அதை அவனே ஆண்டும் வருகிறான்;

இந்த விந்திய மலைப் பகுதியில்தான் சுக்கிரன் இருக்கிறார்; அவரைப் போய்ப் பார்த்த தண்டன், அவருக்கு சீடனாகி விட்டான்; இருந்தாலும் தண்டனுக்கு உள்ள கோணல்புத்தி மாறவில்லை; சுக்கிரனின் மகள் அரசை என்னும் அழகி; இவளைப் பார்த்து இவள்மீது ஆசை கொள்கிறான் அதனால் அவளைப் பலவந்தப்படுத்தியும் விட்டான்; இதை அறிந்து சுக்கிரனுக்கு அவன்மீது கோபம் வருகிறது;

“தந்தைக்கு அடங்காத பிள்ளை எங்கும், யாரிடமும் அடங்க மாட்டான்போல!”

சுக்கிரன் இவனுக்கு சாபம் இடுகிறார்; “உன் பட்டணம் முழுவதும் மண்-மழை பொழிந்து உன் பட்டணமே அழியட்டும்” என்கிறார்; அதன்படி மண் மழையாகப் பெய்து, அவனின் பட்டணம் அழிந்து விட்டது; அதுதான் தண்டகாரணியம் என்று பெயராம்; இதை தட்சிண தேசம் என்றும் சொல்கிறார்கள்;

சென்னை மழையும் இப்படி ஏதாவது ஒரு சாபத்தால் வந்ததாக இருக்குமோ?
_______

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s