யக்ஞவால்கியரும் மைத்ரேயியும்

Yajnavalkya – யக்ஞவால்கியர்.

வேதத்துக்கு வியாக்யானம் அளித்த முனிவர். கிறிஸ்து பிறப்பதற்கு 700  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்கின்றனர். வேதங்களுக்கு விளக்கம் அளிப்பதை உபநிஷத் என்பர். நான்கு வேதங்களில் ஒன்றான யஜூர் வேதத்தை கரைத்து குடித்தது மட்டுமில்லாமல், சூரியனின் அருள்பெற்று மேலும் பல வேதங்களை அதில் சேர்த்தும் உள்ளாராம்.

யஜூர் வேதம் The Yajurveda:

யஜ் என்றால் அர்பணிப்பு, வழிபாடு என்றும் வித் என்றால் வித்தை, அறிவு என்றும் பொருளாம். இந்த யஜூர் வேத மந்திரங்களை இரண்டு பிரிவாக (சம்ஹிதைகளாக=பிரிவாக) பிரித்துள்ளனர். ஒன்று, தைத்திரேயா, மற்றொன்று வஜஜனேயா; தைத்திரேயே சம்ஹிதையை கருப்பு சம்ஹிதை அல்லது கிருஷ்ண சம்ஹிதை என்றும், வஜஜனேயா சம்ஹிதைக்கு வெள்ளை சம்ஹிதை அல்லது சுக்ல சம்ஹிதை என்றும் பெயராம்.

இந்த வெள்ளை சம்ஹிதை என்னும் வஜஜனாயா சம்ஹிதை புத்தகத்தின் முதல் வரிகள் இவைகள்…..

THEE for food. Thee for vigour. Ye are breezes.

To noblest work God Savitar impel you.

Inviolable! swell his share for Indra.

No thief, no evil-minded man shall master you rich in off-spring,

free from pain and sickness.

Be constant, numerous to this lord of cattle.

Guard thou the cattle of the Sacrificer.

முனிவர் யக்ஞவால்கியர் அவரின் மனைவியான மைத்ரேயிடம் கூறுகிறார், “நான் போகிறேன்; என்னுடைய செல்வங்கள் அனைத்தையும் உன்னிடம் விட்டு செல்கிறேன்” என்று சொல்கிறார்; மனைவி கேட்கிறார், “இந்தச் செல்வங்கள் எனக்கு மோட்சத்தை அளிக்குமா?” அதற்கு கணவன், “இந்த செல்வங்கள் ஒருக்காலும் மோட்சத்தை அளிக்காது; மாறாக இந்த உலகில் நீ வசதியாக வாழலாம்.” அதற்கு மனைவி, “அப்படியென்றால், மோட்சத்தை அடைய நான் என்ன செய்ய வேண்டும்” என கேட்கிறாள்;

அதற்கு கணவன், “இப்படி என் பக்கத்தில் வந்து உட்கார்; நான், உனக்கு சொல்கிறேன்; அப்போது உன் காதுகளில் கேட்டுக் கொண்டே தியானத்தில் இரு; இதை நான் உனக்கு சொல்வதற்கு காரணம், நீ என் மனைவி என்பதாலோ, அல்லது நீ என்மீது அன்பு வைத்துள்ளாய் என்பதாலோ அல்ல; உன்னில் இருக்கும் ஆத்மா உன் கணவனை விரும்புகிறது; ஏனென்றால், அந்த உன் ஆத்மா உன்னையே விரும்புகிறது; எல்லோருமே, அவரவர் மனைவி என்பதால் மனைவியை விரும்புவதில்லை; ஆனால் அவர்கள், அவர்களேயே விரும்புவதால், அவர்களின் மனைவியை விரும்புகிறார்கள் என்பதே உண்மை; அப்படித்தான் நாம் குழந்தைகளை விரும்பும் செயலும்; இதைப்போலவே, யாரும் செல்வத்துக்காக, செல்வத்தை விரும்புவதில்லை; ஆனால் நாம் நம்மை விரும்புவதால், அந்த நாம் என்ற நமக்கு செல்வம் தேவைப்படுகிறது; எனவேதான் செல்வத்தை விரும்புகிறோம். அதேபோலவே, யாரும் பிரம்மத்துக்காக அந்த பிரம்மத்தை விரும்புவதில்லை; நாம் நம்மை விரும்புகிறோம்; அந்த நமக்கு பிரம்மம் தேவை; எனவே நாம் பிரம்மத்தை விரும்புகிறோம். மைத்ரேயி! அந்த நாம் என்றதை கேட்கும்போதும், நாம் என்றதை பார்க்கும் போதும், நாம் என்றதை உணரும்போதும், இந்த எல்லாமும் தெரியவரும். எனவே எல்லாமே சுயநலம் சார்ந்ததே! நான் என்னை விரும்புவதால், நீ எனக்கு தேவை என்பதால், உன்னை விரும்புகிறேன், அவ்வளவே! எனவே “நான்” என்ற நானே இத்தனைக்கும் காரணம்; இருந்தாலும், இதுவும் ஒருவகையில் தவறான தத்துவமே! அந்த “நான்” என்பது ஒரு நிழல்! நிழல் என்றால் ஒரு நிஜம் இருக்க வேண்டுமே? அது பக்கத்தில்தானே நிற்கும்! அந்த நான் என்ற நான் மீது வைக்கும் விருப்பமே இந்த பிரபஞ்சம். அது கெட்டதாகவும், மிகச் சிறியதாகவும் தெரிகிறது; ஏனென்றால், அந்த நிஜம், நான் என்னும் சிறிய பொருளில் இருப்பதால் சிறியதாகத் தெரிகிறது. நான் என்னை நேசிப்பது சுயநலம்; நாம் நம்மை நேசிக்கிறோம் என்று தெரியாமலேயே நேசிப்பது சுயநலமில்லை; ஞானிகள் இந்தமாதிரியான சுயநலமில்லாத நேசத்தைத்தான் வைத்துள்ளனர்; பிரம்மம் எங்கும் நிறைந்திருந்தாலும், அது நம்மிலும் ஊடுருவி உள்ளது. நாம் அதைத் தேடும்போது அது நமக்கு தெரிகிறது; கடவுளைத் தேடுபவனுக்கு கடவுள் தெரிகிறான்; அவன், நம் (ஆத்மாவாக) உள்ளேயே இருக்கும்போது அவனை அங்குதானே தேடவேண்டும்; நம்மை விட்டு எல்லாமே போய் விடும் வாய்ப்பு உள்ளவை; ஆனால் ஆத்மா மட்டும் பிரியாமல் இருக்கும். நான் என்னவாக இருந்தாலும் எனக்குள் இருப்பது ஆத்மா மட்டுமே; அந்த ஆத்மாவை நேசிக்க வேண்டும்.

யக்ஞவால்கியர் அவர் மனைவி மைத்ரேயிக்கு செய்த உபதேசம் இது. நமக்கும் சேர்த்துத்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s