ஆதிசங்கரர்

ஆதிசங்கரர்

இந்த உயிரில் ஆத்மா இருப்பதாக இந்து மதம் சொல்கிறதாம்;

ஆனால், இந்த உயிரில் ஆத்மா என்பதே இல்லையென புத்தமதம் சொல்கிறதாம்;

கேரளாவில் உள்ள காலடி என்ற ஊரில் 788ல் பிறந்தவர் ஆதிசங்கரர். தனது எட்டு வயதில் சன்னியாசி ஆனவர்; தாய் மறுத்தபோதும், குளிக்கும்போது, முதலை கவ்விக்கொண்டது என்று பொய் சொல்லி, சந்நியாசம் போக அனுமதி கேட்க, தன் தாய் அனுமதித்தால் முதலை விட்டுவிடும் என்று பொய்யாச் சொல்லி, தாயை நம்பவைத்து, சந்நியாசம் பெற்றவர் என்று எல்லோருக்கும் தெரியும்.

தனது 32 வயதிலேயே காலமாகிவிட்டார்; ஆனால் இந்த உலகுக்கு “அத்வைத வேதாந்தத்தை” கொடுத்துவிட்டு சென்றவர்;

அத்வைதம் = இந்த உயிரிலுள்ள ஆத்மாவும், பரந்து விரிந்து பிரபஞ்சம் நிறைந்துள்ள பரமாத்மாவும் வேறு வேறு அல்ல; இரண்டும் ஒரே இயல்புடையவை, என்ற வேதாந்தத்தை இந்த உலகுக்குச் சொன்னவர். வேதங்களான, பிரமசூத்திரத்துக்கும், உபநிஷங்களுக்கும், பகவத்கீதைக்கும் வியாக்கியானம் எழுதியவர்; இவரின் வேதாந்தத்தை பரப்புவதற்காக உருவாக்கியதுதான் இந்தியாவில் உள்ள பெரிய சங்கர மடங்கள்.

மேற்கே தூவாரகையும் (குஜராத்), கிழக்கே ஜெகநாதபூரியும் (ஒடிசா), தெற்கே சிருங்கேரியும் (கர்நாடகா), வடக்கே பத்ரிநாத்தும் (உத்ரகாண்டில்) தெற்கே காஞ்சி மடம் (தமிழ்நாடு) இவர் ஏற்படுத்தியவைகளாம். இன்னும் சிலவும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பிரம்மசூத்திரம்;

இதை பகவான் வியாச முனிவர் படைத்துள்ளார்; இதை 555 குறிப்புப் பாடல்களாக கொடுத்துள்ளார். இந்த சூத்திரம்தான் வேதத்தின் வித்து; இது உயிரிலுள்ள ஜீவாத்மாவுக்கும், பிரபஞ்சத்திலுள்ள பரமாத்மாவுக்கும் உள்ள உறவை சொல்கிறதாம். இதை அறிந்தவர் கடவுள் தொடர்பை அறியமுடியுமாம்.

இதற்கு விளக்கவுரை எழுதியவர் ஆதி சங்கரர்.

இவர் கொடுத்த வேதாந்தமான, ஆத்மாவும் பரமாத்மாவும் ஒரே இயல்புடையதுதான் என்பதை உணருவோம்.

அவர் எழுதிய “அத்வைத அனுபூதி” என்ற நூலின் முதல் பாடல்;

“உள்ளம் பெருமகிழ்ச்சியடைகிறது என்றும் சத்தியம் என்றும் சொல்லும் சொல் எல்லாம் சிவம்தான்; எது மகிழ்ச்சி எது சத்தியம் என்று சொல்லப்படுகிறதோ அதுதான் “நான்” என்று சொல்வது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s