காந்தர்வ திருமணம்

காந்தர்வ திருமணம்

எட்டுவகை திருமணங்களில் இது ஒரு வகை;

(1)Brahma = பிரம்மா = வேதம் கற்ற யோக்கியனுக்கு, பெண்ணின் தகப்பனார் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது இந்த வகை;

(2)Daiva = தெய்வ = மதகுருவுக்கு, பெண்ணை ஆபரணங்களுடன், பெண்ணின் தகப்பனார் திருமணம் செய்து கொடுப்பது.

(3)Arsha = அர்ஷ (ரிஷி) = ரிஷிகளுக்கு பெண்ணைக் கொடுப்பது; ரிஷியிடம் பசுமாட்டை பெற்றுக் கொண்டு பெண்ணின் தகப்பன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது;

(4)Prajapatya = மணமகனுக்கு, மணமகளுக்கும் வாழ்த்துச் சொல்லி, “நீங்கள் இருவரும் உங்கள் வாழ்வின் கடமைகளை செய்துவாருங்கள்” என வாழ்த்தி பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது;

(5)Asuras = அசுர = மணமகன் வசதிக்கேற்ப, பொன்னும் பொருளும் மணமகளுக்கும் அவளின் தந்தைக்கும் கொடுத்து திருமணம் செய்து கொள்வது;

(6)Gandharva = காந்தர்வ = காதல் மணம்; பெற்றோருக்கு தெரியாமல் ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வது;

(7)Rakshasa =ராட்சச = பொண்ணைக் கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்து கொள்வது; இதில் பெண்ணின் உறவினர்களை கொலையும் செய்வார்கள்.

(8)Pisaka = பைசாச = முதலில் பெண்ணை அவளின் தூக்கத்தில் கெடுப்பது; அல்லது மயக்க மருந்து கொடுத்த கெடுப்பது; அல்லது கடத்திக் கொண்டுபோய் கெடுப்பது. பின்னர் திருமணம் செய்து கொள்வது.

இந்த எட்டு வகைகளில், முதல் நான்கும் நல்ல முறையான திருமணங்கள் என்றும், மற்ற நான்கும் முறையற்ற திருமணங்கள் என்றும் சொல்லப்படுகிறது;

அதிலும், மற்ற நான்கில், அதாவது 5 முதல் 8ல், 5ம் 6ம் ஏற்றுக் கொள்ளலாமாம்; 7,8 வகைகள் மன்னிக்க முடியாதவைகளாம்;

6வது வகையான காந்தர்வ திருமணத்தைத்தான் சகுந்தலை செய்திருக்கிறாள்;

மகாகவி காளிதாசன் இந்த கதையை “அபிஞான சகுந்தலம்” என்ற காப்பியமாகப் படைத்திருக்கிறான். மகாபாரதக் கதையான சகுந்தலாவை கவி நயத்துடன் காளிதாசன் படைத்திருக்கிறான்.

விசுவாமித்திரரை மயக்க இந்திரலோக பேரழகி மேனகையை இந்திரன் அனுப்புகிறான்; அவளும் மயக்கியதுடன் மயங்கியும் விட்டாள்; அதனால் அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது; அதுவே சகுந்தலா என்ற இந்த காவியத்தின் நாயகி; மேனகையையும் அவள் குழந்தையையும் விசுவாமித்திரர் கோபத்தில் விரட்டி விட்டார். மேனகை இந்திர லோகம் சென்றுவிட்டாள்; குழந்தையை அப்படியே காட்டில் போட்டுவிட்டு போய்விடுகிறாள்; சகுந்தல பறவைகள் அந்த குழந்தையை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறது. அந்தக் காட்டில் தவம் செய்யும் கன்வ முனிவர் பார்த்து அந்த குழந்தையை வளர்க்கிறார்; சகுந்தல பறவைகள் வளர்த்ததால் அவளுக்கு சகுந்தலா என்ற பெயரை வைக்கிறார்; பருவம் அடைந்த சகுந்தலா காட்டில் உலா வருகிறாள்; அப்போது, அந்த நாட்டு இளவரசன் துஷ்யந்தன் காட்டுக்கு வேட்டைக்கு வந்தவன் இவளை பார்க்கிறான்; இவளும் இளவரசனைப் பார்க்கிறாள்; காதல் மலர்கிறதாம்; கற்பை இழக்கிறாள்; திருமணம் செய்யும்படி கேட்கிறாள்; அவனும் திருமணம் செய்து கொள்கிறான்; எந்த சாட்சியும் இல்லாமல் நடக்கும் திருமணம்; காந்தர்வ அல்லது கந்தர்வ காதல் திருமணம் இது; இளவரசன் நாடு திரும்புகிறான்; போகும்போது ஒரு மோதிரத்தை கொடுத்து, அவன் அடையாளமாக அரண்மனைக்கு வரச் சொல்கிறான்; கர்ப்பமாகிறாள்; கணவனின் நினைவு வருகிறது; படகில் பயணம்; நதியின் நீரில் கையை வைத்து விளையாடிக் கொண்டே வருகிறாள்; கையில் அணிந்திருந்த அரச முத்திரை மோதிரம் ஆற்று நீரில் நழுவி விடுகிறது; இவளுக்குத் தெரியவில்லை; அரண்மனைக்கு போகிறாள்; அங்கு கணவன் துஷ்யந்தனை சந்திக்கிறாள்; அவனுக்கு நினைவு வரவில்லை; இவள் யாரென்று தெரியவில்லை; மறுத்து விரட்டி விடுகிறான்; சோகத்துடன் காட்டிற்கே திரும்பி வருகிறாள்; கர்ப்பிணியான சகுந்தலா ஒரு மகனை ஈன்றெடுக்கிறாள்; அவனே பரதன். வாலிபன் ஆகிறான்; வீரம் மிக்கவன்; சிங்கத்தின் வாயைத் திறந்து எத்தனை பற்கள் இருக்கின்றன என்று எண்ணிப் பார்ப்பானாம்.

சகுந்தலா ஆற்றில் நழுவ விட்ட மோதிரத்தை ஒரு மீன் விழுங்கிவிடுகிறது; அதை ஒரு மீனவன் பிடிக்கிறான்; அதன் வயிற்றில் மோதிரத்தை கண்டு அதை சகுந்தலாவிடம் கொடுக்கிறான்;

ஒருநாள், காட்டுக்கு துஷ்யந்தன் வருகிறான்; அங்கு பரதன் சிங்கத்தின் வாய்க்குள் விரலைவிட்டு பற்களை எண்ணிக் கொண்டிருப்பதை பார்த்து அவனை நெருங்கி, பரதனின் கையில் கட்டிய கயிறு அவிழ்ந்து விட்டதை எடுத்து கட்டிவிட்டு, நீ யார் என்று கேட்கிறான்; இந்த கயிறை கட்டும் திறமை என் தந்தைக்கு மட்டுமே உண்டு என்று கூறி நீங்கள்தான் என் தந்தை என்று தன் தாயிடம் அழைத்துச் செல்கிறான்; அவளும் கணவனை அடையாளம் கண்டு, கணவனும் மனைவியை அடையாளம் கண்டு, அனைவரும் அரண்மனைக்குச் சென்று அரச வாழ்வை தொடங்குகிறார்கள்.

இந்த பரதனின் வழி வந்தவர்கள்தான், மகாபாரதக் கதையின் கௌரவர்களும் பாண்டவர்களும் என்று மகாபாரதக் கதையை ஆரம்பிக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s