மாக்னா கார்ட்டா The Magna Carta

மாமன்னர் ஓலை அனுப்பினார் என்றால், குறுமன்னர் அதை மதித்து நடக்க வேண்டும். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மதித்துத்தானே நடந்து கொள்ள வேண்டும். வலுத்தவனுக்கு இளைத்தவன் அடிமைதானே! இதுதானே இன்று உலகில் நடக்கிறது. இவ்வாறு நடக்கும்படிதானே இறைவனும் ஏற்படுத்தியுள்ளான். பலமுள்ளவர்களே ஜெயிக்க முடியும். பலம் என்பது உடல்பலம், மனபலம், பணபலம், அதிகாரபலம், அடியாட்கள் பலம், ராணுவபலம், வியாபாரபலம், விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் பலம், இன்னும் எவ்வளவோ. இவை எல்லாவற்றிலும் ஒருவரை ஒருவர் விஞ்சும் பலம் உண்டு. வெற்றியடைபவன் வீரன், தலைவன்.

மாமன்னர் ஓலை அனுப்புவதை, Charter என்பர். ஒரு சார்ட்டரை அனுப்பினால் அதை மற்றவர் மதித்து நடக்க வேண்டும். இங்கிலாந்து மன்னர்களும், ராணிகளும் அவ்வாறே சார்ட்டர்கள் மூலம் உலக நாடுகளையும் அதன் மக்களையும் ஆட்சி செய்து வந்தனர். சார்ட்டர் என்பது அதிகார உத்தரவு. கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும் என்பது அதன் உட்பொருள்.

இந்த சார்ட்டர்களிலேயே பெரியது எனப்படுவது, “பெரிய சார்ட்டர்” “பெரிய உத்தரவு” என்னும் “மாக்னா கார்ட்டா” Magna Carta or “The Great Charter.”  மாக்னா கார்ட்டா என்ற வார்த்தை லத்தீன் வார்த்தை. அதன் பொருள்தான் பெரிய அதிகார உத்தரவு. பொதுவாக, பேரரசர்கள் மற்ற சிற்றசர்களுக்கு இந்த சார்ட்டர் உத்தரவை (அடுத்த நாட்டு மன்னர் ஓலை அனுப்புவதுபோல) அனுப்புவர். ஆனால் இந்த பெரிய சார்ட்டர், இங்கிலாந்து மன்னரிடமிருந்து ஒரு பெரும்பகுதி சுதந்திரம் கேட்டுப் பெற்ற சார்ட்டர் இது. மன்னர்  உத்தரவு இடுவார். இங்கு, மக்கள், மன்னருக்கு உத்தரவு இட்ட சார்ட்டர். அந்த வகையில் இது உலகப் புகழ் பெற்றது.

பரென்-baron என்னும் பெரிய நில ஜமீன்தார்கள், இங்கிலாந்து மன்னருக்கு படை பலம் கொடுப்பர். அதற்கு பதிலாக அந்த பகுதியில் உள்ள பெரும் நிலங்களை, ஆட்களைக் கொண்டு விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்த்தும் பலன்களை அடைந்து கொள்வர். அந்தந்த பகுதியில் இவர்கள்தான் அதிகாரமிக்கவர்கள். மன்னர் என்பவர் பேருக்குதான் மன்னர். அதிலும் பலமில்லாத மன்னர் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படி பலம் குறைந்த இங்கிலாந்து மன்னர்தான் மன்னர் ஜான் King John of England in 1215. ஜமின்தார்கள், இன்னும் அதிகாரம் வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். கான்டர்பரி சர்ச் தலைமை பிசப் தலைமையில் சமரசம் ஆகியது மன்னருக்கும் ஜமின்தார்களுக்கும். அப்போது ஏற்பட்ட ஒப்பந்தம்தான் இந்த மாக்னா கார்ட்டா என்ற ஒப்பந்தம். இதன்படி ஜமின்தார்களுக்கு அதிக அதிகாரத்தை எடுத்துக் கொண்டனர். மன்னரின் அதிகாரம் குறைந்தது. இதில் முக்கியமானது, மன்னர் அவர் இஷ்டத்துக்கு ஜமின்தாரரை சிறையில் அடைக்க முடியாது. ஜமின்தார்களிடமிருந்து வரிகளை கட்டாயப் படுத்தி வசூல் செய்ய முடியாது.

இந்த மாக்னா கார்ட்டர் தான் முதன் முதலில் “மக்களாட்சி” எற்பட உருவான முதல் சட்டம் என்றுகூட சொல்வார்கள். அந்தளவுக்கு இதற்கு பெருமை உண்டு. மன்னரின் இதிகார பதவியை குறைத்து, ஜமின்தாரின் அதிகாரத்தை வலுப்படுத்திய சட்டம்.

இங்கிலாந்து மன்னர் ஜான் தான் முதன்முதலில் 1215ல் இவ்வாறு இறங்கி வந்தவர். அப்போது மன்னருக்கு உள்ள அதிகாரம் மண்ணைக் கவ்வி விட்டது. பேருக்குத்தான் மன்னர். பெருமைக்குத்தான் மன்னர். மற்றவற்றை ஜமின்தார்கள் என்னும் பரான்களும் அவர்களின் பிரதிநிதிகளும், மக்களின் பிரதிநிதிகளுமே நாட்டை ஆண்டு வந்தார்கள். ராஜா என்பவர், ராஜா மாதிரி சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டார்.

வெகுகாலம் கழித்து இந்த முறைதான், பார்லிமெண்ட் முறையாக இங்கிலாந்தில் ஏற்பட்டு, இதுவே உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. பார்லிமெண்ட் முறை வந்தவுடன், சட்டங்களை இயற்றப்பட்டன. அவைகள் சார்ட்டர் சட்டங்கள் என்று பெயர் கொண்டன. பின்னர் மக்களாட்சி சட்டங்களாக மாறின. இந்தியாவையும், அவர்கள் இந்த சார்ட்டர் சட்டப்படிதான் ஆண்டு வந்தனர்.

இந்த மாக்னா கார்ட்டா 1215 சட்டம் எழுதப்பட்டதை பிரிட்டீஸ் நூலகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனராம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s