பதிமூன்றாம் எண் (13)

பதிமூன்றாம் எண் (13)
நம்பர் 13 நல்ல நம்பர் இல்லையோ? ஐரோப்பிய நாடுகளில்தான் இது நல்ல நம்பர் இல்லை என்று கருதினார்கள் என்று நினைத்தால், இந்திய மண்ணிலும் இது நல்ல நம்பர் இல்லை என்றே கருதப்பட்டதாகவே தெரிகிறது.
ஏசுபிரானின் கடைசி இரவுச் சாப்பாட்டில் மொத்தம் 13 பேர் கலந்து கொண்டனர். அதில் ஒருவர்தான் ஏசுபிரானைக் காட்டிக் கொடுத்தார். 13-க்கு அப்படி என்ன கெட்ட கணக்கு உள்ளது என்று தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகளில் இன்னும் 13 எண்ணை உபயோகிக்கவே பயப்படுகிறார்களாம்.
மகாபாரதத்தில், அர்ஜூனின் மகன் பெயர் அபிமன்யூ. இவன் அர்ஜூனனுக்கும் அவனின் இன்னொரு மனைவி சுபத்திரை என்பவளுக்கும் பிறந்தவன். சந்திர அம்சமாகப் பிறந்தவன் என்று புகழ்வர். அதிக அழகுள்ளவனாம். இந்த அபிமன்யூவின் மனைவி பெயர் உத்தரை. அவள் அப்போது கர்ப்பமாக இருக்கிறாள். அந்த நேரத்தில் மகாபாரதப் போர் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. அன்று 13-ம் நாள். அபிமன்யூ போருக்குப் போகிறான். இவன் பதும வியூகத்தை உடைத்து உள்ளே படையுடன் நுழைந்து ஆக்ரோஷமாக போரிடுகிறான். ஆனால், அந்த எதிரியின் பதுமயூக வியூகப் படைகளை உடைத்து வெளியேற தெரியவில்லை. அதில் மடிகிறான். இது அர்ஜூனனுக்கு பெருந்துயரம் கொடுத்த நேரம்.
இங்கும் இந்த 13ம் நாளை மிகக் கொடிய நாளாகவே காண்பித்திருக்கிறார்கள். இன்றளவும், இந்த 13 நம்பர் எந்தக் காரணம் கொண்டும் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
உண்மையில் இந்த 13 நம்பர் நல்ல நம்பர் இல்லையா? இதில் ஏதும் விஞ்ஞானபூர்வ காரணம் இருக்கிறதா? நமக்குத்தான் அந்த உண்மை தெரியவில்லையா? அல்லது இதுவும் மூடநம்பிக்கைதான் என்று உதறிதள்ளிவிடலாமா? தெரியவில்லையே?

Advertisements

Lady Godiva

லேடி காடைவா (Lady Godiva):

லேடி கடைவா என்ற பெண்மணி Leofric லியோபிரிக் என்ற மன்னனின் மனைவி. 11ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உள்ள கோவண்ட்ரி பெருநகரத்தில் வாழ்ந்தவர்கள்.

கடைவா என்றால் கடவுளின் பரிசு என்று அர்த்தமாம்.

இந்த பெண்ணின் சிறப்பு என்னவென்றால், ஒரு கோரிக்கைக்காக கோவன்ட்ரி நகரத்தை இவள் நிர்வாணமாகவே குதிரையில் ஏறி சுற்றி வந்தாள் என்பர்.

இவளின் கணவர் மன்னன் லியோபிரிக் மக்களுக்கு அதிக வரி போட்டுவந்தார். அதை ஒருமுறை, கோவைடோ, வரிகுறைப்புச் செய்யும்படி எதிர்த்து கேட்டார். உன்னால் நகர வீதியில் நிர்வாணமாகச் செல்ல முடிந்தால், நானும் வரியை குறைத்துக் கொள்ள முடியும் என்று சொன்னாராம். வரியை குறைக்க முடியாது என்பதற்காக இப்படி சொல்லி இருக்கிறார்.

ஆனால், கடவுள் பக்தி மிகுந்தவர் லேடி கொடைவா. மக்களின் மேல் அன்பும் அக்கறையும் கொண்டவர். எனவே உடனே தன் குதிரையில் ஏறி உட்கார்ந்து தன் உடைகளை கலைந்துவிட்டு நிர்வாணமாகவே நகரசை சுற்றி வந்தார் என்ற பெருமைக்கு உரியவர். அதை வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் பார்த்த ஒருவன் கண் பார்வை இழந்ததாவும், உயிர் போனதாகவும் சொல்வார்கள்.