விதியை வெல்லும் பிள்ளையார்

 

புத்தி தத்துவம்

விதியை வெல்லும் பிள்ளையார்:ஒரு செயல் பலித்துவிடுவதும் (நடந்து விடுவதும்) பலிக்காமல் போவதும் விதி வசத்தால் மட்டுமே.
எனவே ஒரு நல்லசெயல் நடக்காமல் கெடுவதற்கு இரண்டு காரணம். 1. ஊழ் (விதி), 2.புத்தி (சொந்த அறிவு).
ஊழ் வருவதை முன்னரே அவரவர் புத்தியைக் கொண்டு தெளிந்து அதற்குறிய உபாயங்கள் மூலம் அதிலிருந்து விலிகிக் கொள்ள வேண்டும்.
இந்த புத்தி நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்றால், நமக்குள் ஏற்கனவே உள்ள’புத்தி தத்துவத்தால்’ மட்டுமே. இந்த புத்தி தத்துவத்துக்கு அதி தெய்வம் கணேசர் என்னும் பிள்ளையார் என்னும் கணபதி என்னும் விக்னேஷ்வர். இவர் சகல விதமான உயிர்களிடத்திலும் புத்தி தத்துவமாய் விளங்குகிற புத்தி எல்லாவற்றுக்கும் ஆதாரமாய், மூலமாய் விளங்குபவர். இவரை தியானிப்பதால் நமக்கு புத்தி விரிவடைவதும், தேவைப்படும்போது நல்ல உபாயங்கள் தோன்றுவதும் ஆன நல்ல  விளைவுகளை ஏற்படுத்துவார். இந்த புத்தி தத்துவம் இல்லாமல் ஒரு செயலையும் செய்ய முடியாது. நாம் எடுத்த காரியங்கள் முடிவுக்க வர வேண்டும் என்றால் இந்த புத்தி தத்துவம் நமக்குத் தேவை.
புத்தி தத்துவத்தை மிகுந்த ஞாபக சக்திக்கு உதாரணமாக்குவர். யானையை மிகுந்த ஞாபக சக்திக்கு உதாரணமாக்குவர். யானையானது ‘கண்டது, கேட்டது, உற்றது,உணர்ந்தது, ஆகிய நான்கையும் ஒரு சிறிது கூட,எவ்வளவு காலம் ஆனாலும் மறக்காமல் நினைவில் கொள்ளும். இது எவ்வளவு வலிமை உடையதாகவும்,பருத்த உடல் கொண்டதாகவும் இருந்தாலும், பழகியவருக்கு யானை ஒரு சிறு ஆட்டிக் குட்டிதான்.
எண்ணம் வேறு, புத்தி வேறு. சித்தி=சித்தம்/எண்ணம். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும், எண்ணம் சிதறும்போது அல்லது எண்ணம் எவ்வாறு இருந்தபோதிலும், புத்தியைக் கொண்டு ஜெயிக்கலாம்.
சித்தியும்., புத்தியும் பிள்ளையாரின் இரண்டு ஆற்றல்கள்.

தேவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் ஏதாவது ஒரு இடையூரால் தடையாகி வந்ததால், சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். அவர் தனது முகத்திலிருந்து ஒரு புத்திரனை தோற்றுவித்தார். அதை உமாதேவியார் கண்டு, இவன் யானைத்தலையும், தேவர்களின் கரங்களும், பூதத்தின் உடலும் பெறுக என்றாள். சிவன், அவரை, கணங்களுக்கு தலைவராக இருக்கும்படி அனுப்பினார். 
அவர், தன்னை வழிப்பட்டுத் தொடங்கும் செயல்கள் எல்லாம் இடையூறு ஏற்படாமல் காப்பதாக வாக்களித்தார். கணங்களின் தலைவர் என்பதால் கணபதி ஆனார். விக்கினங்களை (இடையூறுகளை) காப்பவர் விக்னேஷ்வரர். இவரைப் பற்றி வராக புராண வரலாறு விரிவாகக் கூறும். 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s