அஞ்சனை மகன் அநுமன்

அநுமன் பிறந்த கதை

அஞ்சனை என்பவள் ஒரு அப்சரப் பெண். இவள் ஒரு சாபத்தால், குஞ்சரன் என்னும் வானரனுக்கு புத்திரியாகப் பிறந்தாள்.

இவள் அப்சரப் பெண் என்பதால், நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தை எடுக்கும் ஆற்றல் கொண்டவள்.

அவ்வாறு ஒருமுறை இவள் மனித உருவம் கொண்ட அழகிய பெண்ணாக உருவெடுத்தாள். அப்போது வாயு பகவான் அங்கு வந்ததைக் கண்டு அவனுடன் இந்த பெண் கூடி பெற்ற புத்திரனே அநுமன்.

பின்னர் அவள் வானர உருவத்தில் கேசரி என்னும் வானரனைத் திருமணம் செய்து கொண்டு அவனுக்கு மனைவியாக வாழ்ந்தாள்.

அநுமன் மிக்க ஆற்றல் உள்ளவர். அஞ்சனை வயிற்றில் வாயு பகவானுக்குப் பிறந்த இந்த அநுமன் தேவ அம்சம் பொருந்தியவர் என்பர். இவர் கல்வி அறிவிலும் சிறந்தவர். இவர் வாலியின் அக்கிரமங்களை சகித்துக் கொள்ள முடியாமல் தற்செயலாக ஸ்ரீராமரை அடைந்து அவரைக் கொண்டு வாலியை கொன்று அவன் தம்பிக்கு முடிசூட்டியவன். பின்னர் ராமருக்கு அடிமைபூண்டு அவருக்கு தூதராகி சீதையைத் தேடி இலங்கைக்கு தாவிப் போய் சீதையைப் பார்த்து, இராமருக்கு தெரிவித்து, சீதையை மீட்க சேதுபந்தனம் செய்து அந்த வழியே சேனைகளை நடத்தி போரிட்டு மீட்டவர். கடைசிவரை ராமரின் பக்தராகவே இருந்தவர்.

Advertisements

One thought on “அஞ்சனை மகன் அநுமன்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s