சிகரெட்

எரிக் லாசன் (Eric Lawson) 1970-களில் மால்பரோ சிகரெட்டுக்கு (Marlboro Cigarette) விளம்பரம் செய்து வந்தவர். இவர் தனது 72 வயதில் (ஜனவரி 10, 2014) இறந்து விட்டார். மூச்சு சம்பந்தமான நோயினால் (COPD = Chronic Obstructive Pulmonary Disease) லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இறந்துள்ளார். இவருக்கு 6 குழந்தைகள், 18 பேரக்குழந்தைகள், 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர் டிவி நிகழ்ச்சிகளில் நடித்தவர். இவர் நடித்த டிவி நிகழ்ச்சிகள்: “Baretta and The Streets of San Francisco.” அந்த நேரத்தில் மார்பரோ சிகரெட்டுக்காக அதன் அட்டைபடத்தில் விளம்பரத்தில் வந்தவர். இவர் நடித்த மற்ற டிவி நிகழ்ச்சிகள்: “Charlie’s Angels, Dynasty and Baywatch.” 1977-ல் இவர் நடித்தபோது ஏற்பட்ட விபத்தினால் பின்னர் திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கினார்.

இவர் தனது 14வது வயதிலிருந்தே சிகரெட் பிடிப்பவர். ஆனால் பின்நாளில் சிகரெட்டுக்கு எதிரான நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். சிகரெட்டின் தீமைபற்றி பல நிகழ்வுகளில் பேசி உள்ளார். ஆச்சரியம் என்னவென்றால் அவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததாம். அப்போதே அவருக்கு COPD நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆனால் சிகரெட் பிடிக்கும் பழக்கம் தவறு என அவர் முழுமையாக அறிந்திருந்த போதும், அவரால் அந்தப் பழக்கத்தை விடவே முடியவில்லையாம்.

மால்பரோ சிகரெட் பிடித்து வந்து அதனால் ஏற்பட்ட நோயால் ஏற்கனவே பல நடிகர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களில் டேவிட் மில்லர் என்பவர் சிகரெட் பழக்கத்தால் emphysema என்ற நோயால் 1987ல் இறந்தார். டேவிட் மெக்லீன் என்பவர் 1995ல் நுரையீரல் கேன்சரால் (lung cancer) இறந்தார். (நன்றி: Global News)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s