வாடகைத்தாய் சட்டம்

வாடகைத்தாய்
வாடகைத்தாய் என்பது இந்தியாவுக்கு புதுமையான ஒன்றுதான். இதை இந்தியாவில் 2002-ல் சட்டபூர்வமாக்கினர். வாடகைத்தாய் என்பது Surrogate mother (சரகேட் மதர்) என்பர். சரகேட் (Surrogate) என்பது ஒரு லத்தின் வார்த்தை. சப்ரொகேர் (Subrogare) என்றால் மற்றவருக்காக வேறு ஒருவரை அமர்த்திக் கொள்வது.

ஒரு தாய், அவரின் வயிற்றில்/ கர்ப்பப் பையில் குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் மற்றொரு தாயை வாடகைக்கு அமர்த்தி, அந்த வாடகைத்தாயின் வயிற்றில் (வேறு ஒருவரின் குழந்தைக் கருவை) வளர்ப்பது. இவ்வாறு மற்றொரு தாயின் வயிற்றில் (வாடகைத்தாயின் வயிற்றில்) வேறு ஒருவரின் குழந்தைக் கருவைச் சுமப்பதில், ‘யார் உண்மைத் தாய்/ உண்மையான பெற்றோர்’ என்பதில் குழப்பம் ஏற்பட்டது. கருவை வயிற்றில் சுமப்பவர் தாயா? கருவுக்கு உயிர் கொடுத்த/கருக் கொடுத்த தாய் இவர்கள்தான் உண்மையான தாயா என சந்தேகம். ஆனால் முதன்முதலில் கருக்கொடுத்த தாய்தான் உண்மைத்தாய் என்றும் அவளின் அணுக்களே குழந்தைக்கு உள்ளது என்பதால் அவளே ‘இயற்கைத்தாய்’ என்கின்றனர். அதனால் குழந்தையை வயிற்றில் சுமந்தவள் வாடகைத்தாய் ஆகிவிட்டாள். (குழந்தையை வெளியில் சோறுஊட்டி வளர்ப்பதற்குப் பதிலாக வயிற்றுக்குள் வைத்து ஊட்டி வளர்க்கிறாள் அவ்வளவே என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள்).

யார் தாய் என்பதில் குழப்பம் ஏற்பட்டு 2008-ல் ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்துக்குச் சென்றது. Baby Manji Yamada Vs. Union of India என்ற வழக்கில் இயற்கையான தாய்க்கும் வாடகைத்தாய்க்கும் பிரச்சனை. குழந்தைக்கு உண்மையான தாய் யார் என்றுதான் பிரச்சனை. ஆனால் அந்த வழக்கை ‘குழந்தைகள் உரிமை சட்டம் 2005-ன் படி அமைக்கப்பட்டுள்ள கமிஷனிடம் வழக்கை மாற்றி விட்டனர்.

சென்னை உயர்நீதி மன்றத்திலும் இதேபோன்ற ஒரு வழக்கு வந்தது. ஆனால் இது சற்று வேறு மாதிரியான வழக்கு. இயற்கைத்தாய் கருவை உருவாக்கி கொடுத்தார். ஆனால் அந்தக் கருவை வேறு ஒரு பெண் ‘வாடகைத்தாயாக’ இருந்து குழந்தையை அவளின் வயிற்றில் சுமந்து பெற்றுக் கொடுத்தாள். எனவே இயற்கைத்தாயின் வயிற்றில் குழந்தை பிறக்கவில்லை. இருந்தாலும் அந்த இயற்கைத்தாய்க்கு அவர் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து பிரசவகால விடுமுறை (maternity leave) கொடுக்க வேண்டுமா அல்லது தேவையில்லையா என்ற பிரச்சனை கோர்ட்டுக்கு வந்தது. நீதிபதி சந்துரு அவர்கள், அந்த வழக்கில், ‘தத்துக் குழந்தையை’ கைக்குழந்தையாக தத்து எடுத்து வளர்ப்பவருக்கு பிரசவகால/ மகப்பேறு விடுமுறை கொடுக்க சட்டத்தில் வழி இருக்கும் போது, வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்ட இயற்கைத்தாய்க்கும் மகப்பேறு விடுமுறை உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கினார். பிறந்த குழுந்தையை வளர்ப்பதற்குத்தான் மகப்பேறு விடுப்பு என்றும், அந்த குழந்தையைப் பெற்றுக் கொடுப்பது யாராகவாவது இருக்கட்டும் என்று முடிவானது.

சில சமயங்களில் இந்த இயற்கைத்தாய்க்கும் வாடகைத்தாய்க்கும் ‘யார் உண்மைத்தாய்’ என்பதில் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. எனவே Law Commission of India தனது 228-வது சட்ட அறிக்கையில், ‘இதன் தேவையைப் பற்றியும் அவரவரின் உரிமைகளைப் பற்றியும் மத்திய அரசுக்கு ஒரு சட்ட அறிக்கை அளித்துள்ளது. அதைப் பின்பற்றி, மத்திய அரசும் ‘Assisted Reproductive Technologies (ART) Regulation Bill 2010 என்ற சட்ட முன்வரைவை ஏற்படுத்தி உள்ளது. (இது சட்டமாகி விட்டதா என்று தெரியவில்லை).

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 500 வாடகைத்தாய் உருவாக்கப் பட்டுள்ளதாக, ஒரு (NGO) பொதுநல அமைப்பான G-SMART நிறுவனம் (Global Surrogate Mothers Advancing Rights Trust) சொல்கிறதாம். சுமார் 15 மருத்துவமனைகள் இதில் சிறப்பு திறமையும் கொண்டுள்ளதாம். சில நேரங்களில் இதில் வியாபாரமும், புரோக்கர்களும் புகுந்துவிடும் அளவுக்கு பெரிய வியாபரமாகி விடும் என்ற அச்சமும் உள்ளது.

இந்த வாடகைத்தாய் அமர்த்திக் கொள்வதில், பலவித வகைகள் உள்ளனவாம். கரு கொடுப்பவர் ஒரு தாய், கருவையை வயிற்றில் வளர்ப்பவர் ஒரு தாய் என பல தாய்கள் உள்ளனவாம். அதுபோல தந்தையின் ‘உயிர் அணு’ கொடுப்பவரும் இயற்கைத் தகப்பனாவும் இருக்கலாம் அல்லது வேறு ஒரு ஆணாகவும் இருக்கலாம்.

இனி வரும் காலங்களில் இந்தமாதிரியான வகைகளில் பிறக்கும் குழந்தைக்கு பல தாய்களும், பல தகப்பன்களும் இருக்கலாம். வளர்ப்புக் குழந்தையை ஏற்றுக் கொள்ளும் சட்டம் இதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s