ஆட்டின் தமிழ்ப் பெயர்கள்

ஆட்டின் பொதுப் பெயர் = அருணம், செம்மறி, மோத்தை, அசம், உதள், உடு, கொச்சை, துருவை, ஏழகம், வற்காலி, துள்ளல், பள்ளை, வெள்ளை, வருடை, மேடம், கடா, மை, மறி, வெறி, கொறி, சாகம், பருவை, தகர்.

செம்மறி ஆட்டின் பெயர் = துருவை, மை, கொறி.

ஆண் செம்மறி ஆட்டின் பெயர் = .தகர், கடா, திண்ணகம், ஏழகம், கம்பளம்.

ஆட்டுக் குட்டியின் பெயர் = குட்டன், சோரன், மறி, பறழ்.

வெள்ளாட்டின் பெயர் = வெள்ளை, வற்காலி, கொச்சை.

வெள்ளாட்டுக் குட்டியின் பெயர் = வெள்ளை.

ஆண் வெள்ளாட்டின் பெயர் = செச்சை, சாகம், மோத்தை.

வரை ஆட்டின் பெயர் = சரபம், வருடை.

பன்றியின் பெயர் = கேழல், அரி, குரோடம், கிரி, கிடி, கிருட்டி, ஏனம், மோழல், இருளி, வல்லுளி, களிறு, மைம்மா, கோட்டுமா, போத்திரி, வராகம், கோலம், சூகரம், எறுழி.

கரடியின் பெயர் = பல்லுகம், உளியம், எண்கு, பல்லூகம், எலு, பல்லம், குடாவடி.

மானின் பெயர் = அரிணம், சாரங்கம், நவ்வி, உழை, பிணை, சூனம், மிருகம், மறி, குரங்கம், ஏணம்.

கழுதையின் பெயர் = வாலேயம், கர்த்தபம், காளவாய், அத்திரி, கோகு, வேசரி, கரம்.

கோவேறு கழுதையின் பெயர் = வேசரி.

ஒட்டகத்தின் பெயர் = தாசேரம், அத்திரி, நெடுங்கழுத்தல்.

நரியின் பெயர் = ஓரி, கோமாயு, ஊளன், ஒண்டன், இகலன், சம்பு, சம்புகம், பூரிமாயன், குரோட்டா, சிருகாலன்.

நாயின் பெயர் = சூரன், முடுவல், பாசி, புரோகதி, சுனகன், குக்கல், கூரன், எகினன், அக்கன், குரைமுகன், ஞமலி, ஞாளி, சாரமேயன், சுணங்கன், சுவால.

பெண் நாயின் பெயர் = முடுவல்.

குரங்கின் பெயர் = வலிமுகம், கடுவன், வானரம், அரி, மந்தி, பிலவங்கம், கோகிலம், கோடரம், யூகம், மர்க்கடம், நாகம், கவி.

கருங்குரங்கின் பெயர் = காருகம், யூகம்.

ஒந்தியின் பெயர் = சாயானதம், சரடம், காமரூபி, தண்டு, ஓமான், ஓதி, கோம்பி, முசலி, ஒத்தி.

எலியின் பெயர் = சிகரி, ஆகு, இரும்பன்.

மூஞ்சூறின் பெயர் = சுவவு, சுண்டன், சுகந்தரி.

காரெலியின் பெயர் = கருப்பை.

பெருச்சாளியின் பெயர்  = களதம், துந்துளம், ஆகு, மூடிகம், உந்துரு.

அணிலின் பெயர் = வரிப்புறம், வெளில்.

உடும்பின் பெயர் = தடி, முசலி, கோதா.

முயலின் பெயர் = சசம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s