சிகரெட்

எரிக் லாசன் (Eric Lawson) 1970-களில் மால்பரோ சிகரெட்டுக்கு (Marlboro Cigarette) விளம்பரம் செய்து வந்தவர். இவர் தனது 72 வயதில் (ஜனவரி 10, 2014) இறந்து விட்டார். மூச்சு சம்பந்தமான நோயினால் (COPD = Chronic Obstructive Pulmonary Disease) லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இறந்துள்ளார். இவருக்கு 6 குழந்தைகள், 18 பேரக்குழந்தைகள், 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர் டிவி நிகழ்ச்சிகளில் நடித்தவர். இவர் நடித்த டிவி நிகழ்ச்சிகள்: “Baretta and The Streets of San Francisco.” அந்த நேரத்தில் மார்பரோ சிகரெட்டுக்காக அதன் அட்டைபடத்தில் விளம்பரத்தில் வந்தவர். இவர் நடித்த மற்ற டிவி நிகழ்ச்சிகள்: “Charlie’s Angels, Dynasty and Baywatch.” 1977-ல் இவர் நடித்தபோது ஏற்பட்ட விபத்தினால் பின்னர் திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கினார்.

இவர் தனது 14வது வயதிலிருந்தே சிகரெட் பிடிப்பவர். ஆனால் பின்நாளில் சிகரெட்டுக்கு எதிரான நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். சிகரெட்டின் தீமைபற்றி பல நிகழ்வுகளில் பேசி உள்ளார். ஆச்சரியம் என்னவென்றால் அவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததாம். அப்போதே அவருக்கு COPD நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆனால் சிகரெட் பிடிக்கும் பழக்கம் தவறு என அவர் முழுமையாக அறிந்திருந்த போதும், அவரால் அந்தப் பழக்கத்தை விடவே முடியவில்லையாம்.

மால்பரோ சிகரெட் பிடித்து வந்து அதனால் ஏற்பட்ட நோயால் ஏற்கனவே பல நடிகர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களில் டேவிட் மில்லர் என்பவர் சிகரெட் பழக்கத்தால் emphysema என்ற நோயால் 1987ல் இறந்தார். டேவிட் மெக்லீன் என்பவர் 1995ல் நுரையீரல் கேன்சரால் (lung cancer) இறந்தார். (நன்றி: Global News)

Advertisements

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா (Nelson Mandela)

தென்ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர். 5.12.2013 அன்று தனது இறுதிமூச்சை விட்டு விண்ணுலகை அடைந்தார். இவர் உலக அரங்கில் பல காரணங்களுக்காகப் பிரபலமானவர். தென்ஆப்பிரிக்க சுதந்திரத்திற்கு பாடுபட்டவர். கருப்பர் இன மக்களுக்கும் இவர் ஒரு மகாத்மா.

Vilakazi Street, Orlando West, Soweto. இதுதான் இவரின் பூர்வீக வசிப்பிடம்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் ஒருவரின் இறப்பை துக்கமாக நினைத்து அமைதியுடன் கலந்து கொள்வார்கள். இரங்கல் செய்தியாக மட்டுமே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வார்கள். ஆனால், ஆப்பிரக்கா, ஆசியா போன்ற நாடுகளில் இது முற்றிலும் மாறுபட்டு, அதை ஒரு விழாவாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகின்றனர். மேற்கு பூமியில் ஒரு கலாச்சாரம். கிழக்கு பூமியில் மற்றொரு கலாச்சாரம். இங்கு இறந்த மனிதனின் ஆன்மா மனநிறைவை அடைவதற்காக உயிருள்ள உடல்கள் ஆடல் பாடல்களில் திழைத்து இறந்த உடலின் ஆன்மாவை திருப்தி படுத்துகின்றனவாம். மண்டேலாவுக்கும் அதுபோலவே மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடல் பாடல்களில் ஈடுபட்டு, இறப்பை ஒரு கொண்டாட்டமாகவே ஆக்கினர்.

இவரை ஒருவர் இப்படி நினைவுகூர்கிறார். “From poverty to prison to president. Thank you Mr. Mandela”
அவருடைய இறப்பு அவர் இன மக்களை மறுபடியும் இணைத்திருக்கிறதாம். (Even though we bid goodbye to him, it allows us a chance to unify.)
Great human being. A Benchmark for all the political leaders in this world to emulate. The world has lost a statesman. The world needs many more Mandela to finally achieve peace and real democracy. May his soul rest in peace.

வாடகைத்தாய் சட்டம்

வாடகைத்தாய்
வாடகைத்தாய் என்பது இந்தியாவுக்கு புதுமையான ஒன்றுதான். இதை இந்தியாவில் 2002-ல் சட்டபூர்வமாக்கினர். வாடகைத்தாய் என்பது Surrogate mother (சரகேட் மதர்) என்பர். சரகேட் (Surrogate) என்பது ஒரு லத்தின் வார்த்தை. சப்ரொகேர் (Subrogare) என்றால் மற்றவருக்காக வேறு ஒருவரை அமர்த்திக் கொள்வது.

ஒரு தாய், அவரின் வயிற்றில்/ கர்ப்பப் பையில் குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் மற்றொரு தாயை வாடகைக்கு அமர்த்தி, அந்த வாடகைத்தாயின் வயிற்றில் (வேறு ஒருவரின் குழந்தைக் கருவை) வளர்ப்பது. இவ்வாறு மற்றொரு தாயின் வயிற்றில் (வாடகைத்தாயின் வயிற்றில்) வேறு ஒருவரின் குழந்தைக் கருவைச் சுமப்பதில், ‘யார் உண்மைத் தாய்/ உண்மையான பெற்றோர்’ என்பதில் குழப்பம் ஏற்பட்டது. கருவை வயிற்றில் சுமப்பவர் தாயா? கருவுக்கு உயிர் கொடுத்த/கருக் கொடுத்த தாய் இவர்கள்தான் உண்மையான தாயா என சந்தேகம். ஆனால் முதன்முதலில் கருக்கொடுத்த தாய்தான் உண்மைத்தாய் என்றும் அவளின் அணுக்களே குழந்தைக்கு உள்ளது என்பதால் அவளே ‘இயற்கைத்தாய்’ என்கின்றனர். அதனால் குழந்தையை வயிற்றில் சுமந்தவள் வாடகைத்தாய் ஆகிவிட்டாள். (குழந்தையை வெளியில் சோறுஊட்டி வளர்ப்பதற்குப் பதிலாக வயிற்றுக்குள் வைத்து ஊட்டி வளர்க்கிறாள் அவ்வளவே என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள்).

யார் தாய் என்பதில் குழப்பம் ஏற்பட்டு 2008-ல் ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்துக்குச் சென்றது. Baby Manji Yamada Vs. Union of India என்ற வழக்கில் இயற்கையான தாய்க்கும் வாடகைத்தாய்க்கும் பிரச்சனை. குழந்தைக்கு உண்மையான தாய் யார் என்றுதான் பிரச்சனை. ஆனால் அந்த வழக்கை ‘குழந்தைகள் உரிமை சட்டம் 2005-ன் படி அமைக்கப்பட்டுள்ள கமிஷனிடம் வழக்கை மாற்றி விட்டனர்.

சென்னை உயர்நீதி மன்றத்திலும் இதேபோன்ற ஒரு வழக்கு வந்தது. ஆனால் இது சற்று வேறு மாதிரியான வழக்கு. இயற்கைத்தாய் கருவை உருவாக்கி கொடுத்தார். ஆனால் அந்தக் கருவை வேறு ஒரு பெண் ‘வாடகைத்தாயாக’ இருந்து குழந்தையை அவளின் வயிற்றில் சுமந்து பெற்றுக் கொடுத்தாள். எனவே இயற்கைத்தாயின் வயிற்றில் குழந்தை பிறக்கவில்லை. இருந்தாலும் அந்த இயற்கைத்தாய்க்கு அவர் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து பிரசவகால விடுமுறை (maternity leave) கொடுக்க வேண்டுமா அல்லது தேவையில்லையா என்ற பிரச்சனை கோர்ட்டுக்கு வந்தது. நீதிபதி சந்துரு அவர்கள், அந்த வழக்கில், ‘தத்துக் குழந்தையை’ கைக்குழந்தையாக தத்து எடுத்து வளர்ப்பவருக்கு பிரசவகால/ மகப்பேறு விடுமுறை கொடுக்க சட்டத்தில் வழி இருக்கும் போது, வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்ட இயற்கைத்தாய்க்கும் மகப்பேறு விடுமுறை உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கினார். பிறந்த குழுந்தையை வளர்ப்பதற்குத்தான் மகப்பேறு விடுப்பு என்றும், அந்த குழந்தையைப் பெற்றுக் கொடுப்பது யாராகவாவது இருக்கட்டும் என்று முடிவானது.

சில சமயங்களில் இந்த இயற்கைத்தாய்க்கும் வாடகைத்தாய்க்கும் ‘யார் உண்மைத்தாய்’ என்பதில் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. எனவே Law Commission of India தனது 228-வது சட்ட அறிக்கையில், ‘இதன் தேவையைப் பற்றியும் அவரவரின் உரிமைகளைப் பற்றியும் மத்திய அரசுக்கு ஒரு சட்ட அறிக்கை அளித்துள்ளது. அதைப் பின்பற்றி, மத்திய அரசும் ‘Assisted Reproductive Technologies (ART) Regulation Bill 2010 என்ற சட்ட முன்வரைவை ஏற்படுத்தி உள்ளது. (இது சட்டமாகி விட்டதா என்று தெரியவில்லை).

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 500 வாடகைத்தாய் உருவாக்கப் பட்டுள்ளதாக, ஒரு (NGO) பொதுநல அமைப்பான G-SMART நிறுவனம் (Global Surrogate Mothers Advancing Rights Trust) சொல்கிறதாம். சுமார் 15 மருத்துவமனைகள் இதில் சிறப்பு திறமையும் கொண்டுள்ளதாம். சில நேரங்களில் இதில் வியாபாரமும், புரோக்கர்களும் புகுந்துவிடும் அளவுக்கு பெரிய வியாபரமாகி விடும் என்ற அச்சமும் உள்ளது.

இந்த வாடகைத்தாய் அமர்த்திக் கொள்வதில், பலவித வகைகள் உள்ளனவாம். கரு கொடுப்பவர் ஒரு தாய், கருவையை வயிற்றில் வளர்ப்பவர் ஒரு தாய் என பல தாய்கள் உள்ளனவாம். அதுபோல தந்தையின் ‘உயிர் அணு’ கொடுப்பவரும் இயற்கைத் தகப்பனாவும் இருக்கலாம் அல்லது வேறு ஒரு ஆணாகவும் இருக்கலாம்.

இனி வரும் காலங்களில் இந்தமாதிரியான வகைகளில் பிறக்கும் குழந்தைக்கு பல தாய்களும், பல தகப்பன்களும் இருக்கலாம். வளர்ப்புக் குழந்தையை ஏற்றுக் கொள்ளும் சட்டம் இதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

காலங்களின் தமிழ்ப் பெயர்கள்

பருவகாலத்தின் பெயர் = ஆனியம், இருது (ருது).

ஒரு கலையின் பெயர் = திதி, பக்கம்.

மாதத்தின் பெயர் = மதி, திங்கள்.

மதிதெரியும் கலை இரவின் பெயர் = சீனிவாலி.

மதி மறையும் கலை இரவின் பெயர் = குகு.

பூரணையின் பெயர் (பௌர்ணமி) = உவா, பவ்வம்.

அமாவாசையின் பெயர் = இந்துவோடிரவி கூட்டம், அமை.

வருடத்தின் பெயர் = ஆண்டு, சமை, ஆயனம்.

ஆண்டில் பாதியின் பெயர் (அரையாண்டு) = அயனம்.

ஆகாயத்தின் தமிழ்ப் பெயர்கள்

ஆகாயத்தின் பெயர் = அண்டம், வான், உலகு, மங்குல், அந்தரம், அம்பரம், கோ, குண்டலம், ககனம், காயம், குடிலம், புட்கரம், அநந்தம், வெளி, மீ, மாகம், ஆசினி, நபம், கம், விண்டலம், விசும்பு, வேணி, வியோமம்.

காலத்தின் தமிழ்ப் பெயர்கள்

அருந்ததி = வடமீன், சாலி.
விண்மீன் = உடு, தாரகை, பம், உற்கை, சுக்கை.
நாழிகை = கடிகை, கன்னல், இரித்தை.
கால நுட்பம் = துடி, கலை, விகலை.
காலம் = வேலை, அமையம், செவ்வி, எல்வை, பொழுது, பாணி, காலை, கொன், பதம், போழ்து.
நெடும்பொழுது = நீட்டித்தல், பாணித்தல், நெடித்தல்.
காலவிரை = ஒல்லை, இறை, சிறுவரை, இலேசம், வல்லை, மாத்திரை.
மத்தியானம் = நண்பகல், உச்சி, நடுப்பகல்.
இரவு = அல், விபாவரி, கங்குல், அல்குல், யாமினி, நத்தம், எல்லி,
யாமம், மாலை, இரசனி, நிசி.
பகல் = எல், திவா.
நாள் = ஏல்லை, திவசம், வைகல், அல்கல், தினம், எல்லை, ஆனியம், பகல்.
இருள் = சருவரி, அந்தகாரம், கச்சளம், தமம், துவாந்தம், திமிரம், துணங்கறல்.
முன்னை நாள் = நெருநல், நென்னல்.
பின்னைநாள் = பின்றை, பிற்றை.
வைகறை = புலரி, விடியல்.
நிலவு = சந்திரிகை.
வெய்யில் = ஆதபம், என்றூழ்.

ஆட்டின் தமிழ்ப் பெயர்கள்

ஆட்டின் பொதுப் பெயர் = அருணம், செம்மறி, மோத்தை, அசம், உதள், உடு, கொச்சை, துருவை, ஏழகம், வற்காலி, துள்ளல், பள்ளை, வெள்ளை, வருடை, மேடம், கடா, மை, மறி, வெறி, கொறி, சாகம், பருவை, தகர்.

செம்மறி ஆட்டின் பெயர் = துருவை, மை, கொறி.

ஆண் செம்மறி ஆட்டின் பெயர் = .தகர், கடா, திண்ணகம், ஏழகம், கம்பளம்.

ஆட்டுக் குட்டியின் பெயர் = குட்டன், சோரன், மறி, பறழ்.

வெள்ளாட்டின் பெயர் = வெள்ளை, வற்காலி, கொச்சை.

வெள்ளாட்டுக் குட்டியின் பெயர் = வெள்ளை.

ஆண் வெள்ளாட்டின் பெயர் = செச்சை, சாகம், மோத்தை.

வரை ஆட்டின் பெயர் = சரபம், வருடை.

பன்றியின் பெயர் = கேழல், அரி, குரோடம், கிரி, கிடி, கிருட்டி, ஏனம், மோழல், இருளி, வல்லுளி, களிறு, மைம்மா, கோட்டுமா, போத்திரி, வராகம், கோலம், சூகரம், எறுழி.

கரடியின் பெயர் = பல்லுகம், உளியம், எண்கு, பல்லூகம், எலு, பல்லம், குடாவடி.

மானின் பெயர் = அரிணம், சாரங்கம், நவ்வி, உழை, பிணை, சூனம், மிருகம், மறி, குரங்கம், ஏணம்.

கழுதையின் பெயர் = வாலேயம், கர்த்தபம், காளவாய், அத்திரி, கோகு, வேசரி, கரம்.

கோவேறு கழுதையின் பெயர் = வேசரி.

ஒட்டகத்தின் பெயர் = தாசேரம், அத்திரி, நெடுங்கழுத்தல்.

நரியின் பெயர் = ஓரி, கோமாயு, ஊளன், ஒண்டன், இகலன், சம்பு, சம்புகம், பூரிமாயன், குரோட்டா, சிருகாலன்.

நாயின் பெயர் = சூரன், முடுவல், பாசி, புரோகதி, சுனகன், குக்கல், கூரன், எகினன், அக்கன், குரைமுகன், ஞமலி, ஞாளி, சாரமேயன், சுணங்கன், சுவால.

பெண் நாயின் பெயர் = முடுவல்.

குரங்கின் பெயர் = வலிமுகம், கடுவன், வானரம், அரி, மந்தி, பிலவங்கம், கோகிலம், கோடரம், யூகம், மர்க்கடம், நாகம், கவி.

கருங்குரங்கின் பெயர் = காருகம், யூகம்.

ஒந்தியின் பெயர் = சாயானதம், சரடம், காமரூபி, தண்டு, ஓமான், ஓதி, கோம்பி, முசலி, ஒத்தி.

எலியின் பெயர் = சிகரி, ஆகு, இரும்பன்.

மூஞ்சூறின் பெயர் = சுவவு, சுண்டன், சுகந்தரி.

காரெலியின் பெயர் = கருப்பை.

பெருச்சாளியின் பெயர்  = களதம், துந்துளம், ஆகு, மூடிகம், உந்துரு.

அணிலின் பெயர் = வரிப்புறம், வெளில்.

உடும்பின் பெயர் = தடி, முசலி, கோதா.

முயலின் பெயர் = சசம்.

Joint-Tenancy and Tenancy-in-common

Joint-Tenancy and Tenancy-in-common
Two kinds of ownership and enjoyment of immovable property:
(1) Joint Tenancy:
It is an English concept;
If two or more persons acquire any property by purchase or otherwise jointly without indicating that they are to take separate interests therein, they become joint-tenants (joint ownership).
There are four unities in joint-tenancy, viz.
“Unity of title, unity of interest, unity of possession and unity of time.”
Each owner has same, identical interest.
No one owner has a separate share or the right of alienation.
On the death of one, it goes to the other owner.

(2) Tenancy-in-common:
In a tenancy-in-common there are only two unities namely unity of possession and unity of commencement of title (there is no unity of title or unity of interest).
The special feature of this tenancy-in-common is:-
“If one of the tenants-in-common died, his share will pass to his heirs.”