மூளைச்சாவே ஒரு இறப்புதான்

டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரு பெண் அவரது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவரின் கணவர் அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தார். அந்தப் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளின் நுரையீரலில் இரத்தம் உறைந்துள்ளதால், அவள் ‘மூளைச்சாவு’ (brain-dead) நிலையை அடைந்துள்ளதாகக் கண்டுள்ளனர். மற்றொரு நிகழ்வும் தெரியவந்தது. அவள் அப்போது கர்ப்பமாக இருந்துள்ளார். 14 வாரக் கர்ப்பம்.
அந்த மாநிலச் சட்டப்படி, ஒரு மருத்துவமனையானது, கர்ப்பமாக உள்ள பெண்மணிக்கு மருத்துவச் சிகிச்சையை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்று தனிச் சட்டம் 1999-ல் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
எனவே மருத்துவமனையானது, கர்ப்பவதிக்கு அளித்துவரும் சிகிச்சையை நிறுத்தாமல், மூளைச்சாவில் இருந்த கர்ப்பவதிக்கு உயிர்காப்பு உபகரணத்தை (Ventilator) வைத்து காப்பாற்றி வருகின்றனர். மருத்துவமனை சொல்லும் காரணம், ‘குழந்தை வயிற்றில் இருப்பதால் அந்த மூளைச்சாவு அடைந்த கர்ப்பவதி பெண்மணியை காப்பற்ற வேண்டியது அந்த மருத்துவமனையின் சட்டப்படியான கடமை’ என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்லி வருகிறது.
ஆனால், கர்ப்பவதியின் கணவரும், கர்ப்பவதியின் தாயாரும், மூளைச்சாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள கரு (fetus) இயல்பாக இல்லை என்று மருத்துவ சான்றுகள் கூறுகின்றன. அந்தக் கருவின் கால்பகுதியில் வளர்ச்சி இல்லாமல் இருப்பதால், மூளைச் சாவில் உள்ள பெண்ணை தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டாம், விட்டுவிடுங்கள் என கேட்கிறார்கள்.
 மறுத்தது மருத்துவமனை நிர்வாகமும், அதன் மருத்துவர்களும்.
பொறுக்கமுடியாமல், கணவர் கோர்ட்டுக்குச் செல்கிறார். ‘கர்ப்பவதியின் மருத்துவத்தை நிறத்தமுடியாது என மருத்துவமனை கூறுவது சரியல்ல; அது அந்த 1999 சட்டத்தை தவறுதலாகப் புரிந்து கொண்டுள்ளது. எனவே உயிர்காப்பு உபகரணத்தை (Ventilator) எடுத்துவிட உத்தரவிடும்படி கோர்ட்டை கேட்டனர்.
அந்த மாநிலத்தில் ஏற்படுத்திய இந்தச் சட்டம் 1989-ல் ஏற்படுத்தி பின்பு 1999-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எந்த ஒரு மனிதனும், ஒரு கர்ப்பவதிக்கு சிகிச்சை அளிக்கும்போது இடையில் நிறுத்திவிடக் கூடாது என்கிறது அந்தச் சட்டம். அவளின் குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டாலும் நிறுத்தக் கூடாது என்ற விதி உள்ளது.
ஒரு மனிதர் எப்போது, ‘இன்னும் இறக்கவில்லை’ எனக் கருதப்படுவார். (When is dead not dead?) பொதுவாக மூளைச்சாவு அடைந்தவர்கள் ‘உயிருடன் இல்லை’ என்றே கருதப்பட வேண்டியவர்கள். மூளை வேலை செய்யாது. உடல் இறக்காமல் இருக்கும். தன்னை உணரவும் முடியாது, செயல்படுவும் முடியாது. எனவே என்னதான் அவரின் மற்ற பாகங்கள் உயிருடன் செயலில் இருப்பதாகக் கருதப்பட்டாலும், சட்டப்படி அவர் இறந்தவராகவே கருதப்படுகிறார்.
அவ்வாறு இறந்ததாக கருதப்படும் ஒருவர், எவ்வாறு ‘நோயாளியாக’ அந்த மருத்துவமனையில் இருக்கிறார் என்று அநுமானிக்கமுடியும்? (If she is dead, we don’t see how she can be a patient).  இது அந்த மூளைசாவடைந்த கர்ப்பவதியின் தாயாரின் குமுறல்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ, ‘கர்ப்பினியின் வயிற்றில் ஒரு குழந்தை உயிருடன் உள்ளது என்றும், அது உயிர் வாழ அதற்கு (அந்தக் குழந்தைக்கு) எல்லா உரிமையும் உள்ளது என்றும், மருத்துவமனை எல்லா முயற்சிகளையும் கொண்டு அந்தக் குழந்தையை காப்பாற்றவே செய்யும்’ என்று கோர்ட்டில் கூறியுள்ளது.
நீதிமன்றமோ, இரண்டு பக்கத்து வாத-விவாதங்களையும் கேட்டு, கர்ப்பிணியின் உறவினர்கள் (கணவர், தாய்) விருப்பத்தை மீறி மருத்துவமனை செயல்பட முடியாது என்றும், ‘என்ன வைத்தியம் பார்க்க வேண்டும்’ என்பது உறவினர்களுக்கு உள்ள உரிமை என்றும் எனவே மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு அளித்துவரும் உயிர்காப்பை எடுத்துவிடும்படியும் கூறியது.
இதற்குமுன் கடந்த 30 வருட காலத்தில், இதுபோல 30 நிகழ்வுகளில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பவதியின் கரு காப்பாற்றப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஆம், உயிர் பாதுகாப்பு உபகரணம் அந்தப் பெண்மணிக்குத் தேவையில்லை என அவளின் உறவினர்கள் சொல்லும்போது, தேவையில்லாமல் உயிர்காப்பு உபகரணம் வைத்து மருத்துவத்தை நீட்டிக்கக்கூடாது என்றும் உடனடியாக அதை எடுத்துவிடும்படியும் கூறி உள்ளது.
 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s