பிருஹஸ்பதி

பிருஹஸ்பதி (பிரகஸ்பதி):

வியாழன் அல்லது குரு எனப்படுவார்.

பிரமமானச புத்திரருள் அங்கிரசனின் புத்திரன் தான் வியாழன்.

இவர் தேவகுரு. மகாபுத்திமான். வாசஸ்பதி எனவும் பெயருண்டு. இவர் சகோதரி யோகசித்தி.

இவர் மனைவி பெயர் தாரை. இவரின் மனைவியாகிய தாரையைச் சந்திரன் கவர்ந்து சென்றான். அதனால் பிருகஸ்பதிக்கும் சந்திரனுக்கும் பெரும்போர் மூண்டது. பிரமதேவர் சந்திரனிடம் சென்று தாரையை விட்டுவிடும்படி செய்தார். தாரை பிருகஸ்பதிக்கு மீண்டும் மனைவியானாள்.

புதன் குருவின் மகன்:

ஆனால் தாரை சந்திரனிடம் இருந்த காலத்தில் சந்திரனுக்குத் தாரை வயிற்றில் பிறந்த புத்திரன்தான் புதன். அவனே சந்திர வம்ச ஸ்தாபகன்.பிருகஸ்பதி மண்டலமும் பிருகஸ்பதி எனப்படும். அது பொன்மயமாக இருத்தலின் பிருகஸ்பதிபீதகன், பொன், என்னும் பெயர்களையும் பெறுவான்.

மனிதர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது:

இம்மண்டலத்தைச் சூழ்ந்துள்ள மண்டலங்களிலே மனிதர்களில் சிறந்த அறிவுடையோர்கள் வசிக்கிறார்கள் என்பது ஐரோப்பிய வானசாஸ்திரிகள் முடிவு. அது பிருகஸ்பதியை தேவகுரு என்று கூறும் நமது ஆரிய சித்தாந்தத்திற்கும் ஒப்புடையதே. பிருகஸ்பதி மண்டலம் நமது பூமண்டலத்திலும் பதின்மடங்கு பெரியதாயினும் மிக்க லேசான கோளமாயுள்ளது. அதுபற்றி ஆங்குள்ளோரும் அந்தரத்தில் சஞ்சரிக்கும் லகுதேகிகளாக (லேசான கனமில்லாத உடல்வாகுடன்) இருப்பார்களாம். அவர்களைத் ‘தேவகணத்தினர்’ என்பது புராணமதம். பிருகஸ்பதி மண்டலம் புராணங்களிலே ரதம் எனப்படும். அதனைச் சூழ்ந்துள்ள மண்டலங்களைப் புராணங்கள் வெண்ணிறக் குதிரைகளாக உருவகம் பண்ணிக் கொள்ளும். ஐரோப்பிய வானசாஸ்திரிகள் அவைகளைச் சந்திரர் என்பார்கள். அம்மண்டலங்களின் தொகையை புராணங்கள் எட்டென்பர். ஐரோப்பியர் அவைகளை ஐந்தென்பர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s