மூளைச்சாவே ஒரு இறப்புதான்

டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரு பெண் அவரது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவரின் கணவர் அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தார். அந்தப் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளின் நுரையீரலில் இரத்தம் உறைந்துள்ளதால், அவள் ‘மூளைச்சாவு’ (brain-dead) நிலையை அடைந்துள்ளதாகக் கண்டுள்ளனர். மற்றொரு நிகழ்வும் தெரியவந்தது. அவள் அப்போது கர்ப்பமாக இருந்துள்ளார். 14 வாரக் கர்ப்பம்.
அந்த மாநிலச் சட்டப்படி, ஒரு மருத்துவமனையானது, கர்ப்பமாக உள்ள பெண்மணிக்கு மருத்துவச் சிகிச்சையை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்று தனிச் சட்டம் 1999-ல் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
எனவே மருத்துவமனையானது, கர்ப்பவதிக்கு அளித்துவரும் சிகிச்சையை நிறுத்தாமல், மூளைச்சாவில் இருந்த கர்ப்பவதிக்கு உயிர்காப்பு உபகரணத்தை (Ventilator) வைத்து காப்பாற்றி வருகின்றனர். மருத்துவமனை சொல்லும் காரணம், ‘குழந்தை வயிற்றில் இருப்பதால் அந்த மூளைச்சாவு அடைந்த கர்ப்பவதி பெண்மணியை காப்பற்ற வேண்டியது அந்த மருத்துவமனையின் சட்டப்படியான கடமை’ என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்லி வருகிறது.
ஆனால், கர்ப்பவதியின் கணவரும், கர்ப்பவதியின் தாயாரும், மூளைச்சாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள கரு (fetus) இயல்பாக இல்லை என்று மருத்துவ சான்றுகள் கூறுகின்றன. அந்தக் கருவின் கால்பகுதியில் வளர்ச்சி இல்லாமல் இருப்பதால், மூளைச் சாவில் உள்ள பெண்ணை தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டாம், விட்டுவிடுங்கள் என கேட்கிறார்கள்.
 மறுத்தது மருத்துவமனை நிர்வாகமும், அதன் மருத்துவர்களும்.
பொறுக்கமுடியாமல், கணவர் கோர்ட்டுக்குச் செல்கிறார். ‘கர்ப்பவதியின் மருத்துவத்தை நிறத்தமுடியாது என மருத்துவமனை கூறுவது சரியல்ல; அது அந்த 1999 சட்டத்தை தவறுதலாகப் புரிந்து கொண்டுள்ளது. எனவே உயிர்காப்பு உபகரணத்தை (Ventilator) எடுத்துவிட உத்தரவிடும்படி கோர்ட்டை கேட்டனர்.
அந்த மாநிலத்தில் ஏற்படுத்திய இந்தச் சட்டம் 1989-ல் ஏற்படுத்தி பின்பு 1999-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எந்த ஒரு மனிதனும், ஒரு கர்ப்பவதிக்கு சிகிச்சை அளிக்கும்போது இடையில் நிறுத்திவிடக் கூடாது என்கிறது அந்தச் சட்டம். அவளின் குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டாலும் நிறுத்தக் கூடாது என்ற விதி உள்ளது.
ஒரு மனிதர் எப்போது, ‘இன்னும் இறக்கவில்லை’ எனக் கருதப்படுவார். (When is dead not dead?) பொதுவாக மூளைச்சாவு அடைந்தவர்கள் ‘உயிருடன் இல்லை’ என்றே கருதப்பட வேண்டியவர்கள். மூளை வேலை செய்யாது. உடல் இறக்காமல் இருக்கும். தன்னை உணரவும் முடியாது, செயல்படுவும் முடியாது. எனவே என்னதான் அவரின் மற்ற பாகங்கள் உயிருடன் செயலில் இருப்பதாகக் கருதப்பட்டாலும், சட்டப்படி அவர் இறந்தவராகவே கருதப்படுகிறார்.
அவ்வாறு இறந்ததாக கருதப்படும் ஒருவர், எவ்வாறு ‘நோயாளியாக’ அந்த மருத்துவமனையில் இருக்கிறார் என்று அநுமானிக்கமுடியும்? (If she is dead, we don’t see how she can be a patient).  இது அந்த மூளைசாவடைந்த கர்ப்பவதியின் தாயாரின் குமுறல்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ, ‘கர்ப்பினியின் வயிற்றில் ஒரு குழந்தை உயிருடன் உள்ளது என்றும், அது உயிர் வாழ அதற்கு (அந்தக் குழந்தைக்கு) எல்லா உரிமையும் உள்ளது என்றும், மருத்துவமனை எல்லா முயற்சிகளையும் கொண்டு அந்தக் குழந்தையை காப்பாற்றவே செய்யும்’ என்று கோர்ட்டில் கூறியுள்ளது.
நீதிமன்றமோ, இரண்டு பக்கத்து வாத-விவாதங்களையும் கேட்டு, கர்ப்பிணியின் உறவினர்கள் (கணவர், தாய்) விருப்பத்தை மீறி மருத்துவமனை செயல்பட முடியாது என்றும், ‘என்ன வைத்தியம் பார்க்க வேண்டும்’ என்பது உறவினர்களுக்கு உள்ள உரிமை என்றும் எனவே மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு அளித்துவரும் உயிர்காப்பை எடுத்துவிடும்படியும் கூறியது.
இதற்குமுன் கடந்த 30 வருட காலத்தில், இதுபோல 30 நிகழ்வுகளில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பவதியின் கரு காப்பாற்றப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஆம், உயிர் பாதுகாப்பு உபகரணம் அந்தப் பெண்மணிக்குத் தேவையில்லை என அவளின் உறவினர்கள் சொல்லும்போது, தேவையில்லாமல் உயிர்காப்பு உபகரணம் வைத்து மருத்துவத்தை நீட்டிக்கக்கூடாது என்றும் உடனடியாக அதை எடுத்துவிடும்படியும் கூறி உள்ளது.
 
Advertisements

பிருஹஸ்பதி

பிருஹஸ்பதி (பிரகஸ்பதி):

வியாழன் அல்லது குரு எனப்படுவார்.

பிரமமானச புத்திரருள் அங்கிரசனின் புத்திரன் தான் வியாழன்.

இவர் தேவகுரு. மகாபுத்திமான். வாசஸ்பதி எனவும் பெயருண்டு. இவர் சகோதரி யோகசித்தி.

இவர் மனைவி பெயர் தாரை. இவரின் மனைவியாகிய தாரையைச் சந்திரன் கவர்ந்து சென்றான். அதனால் பிருகஸ்பதிக்கும் சந்திரனுக்கும் பெரும்போர் மூண்டது. பிரமதேவர் சந்திரனிடம் சென்று தாரையை விட்டுவிடும்படி செய்தார். தாரை பிருகஸ்பதிக்கு மீண்டும் மனைவியானாள்.

புதன் குருவின் மகன்:

ஆனால் தாரை சந்திரனிடம் இருந்த காலத்தில் சந்திரனுக்குத் தாரை வயிற்றில் பிறந்த புத்திரன்தான் புதன். அவனே சந்திர வம்ச ஸ்தாபகன்.பிருகஸ்பதி மண்டலமும் பிருகஸ்பதி எனப்படும். அது பொன்மயமாக இருத்தலின் பிருகஸ்பதிபீதகன், பொன், என்னும் பெயர்களையும் பெறுவான்.

மனிதர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது:

இம்மண்டலத்தைச் சூழ்ந்துள்ள மண்டலங்களிலே மனிதர்களில் சிறந்த அறிவுடையோர்கள் வசிக்கிறார்கள் என்பது ஐரோப்பிய வானசாஸ்திரிகள் முடிவு. அது பிருகஸ்பதியை தேவகுரு என்று கூறும் நமது ஆரிய சித்தாந்தத்திற்கும் ஒப்புடையதே. பிருகஸ்பதி மண்டலம் நமது பூமண்டலத்திலும் பதின்மடங்கு பெரியதாயினும் மிக்க லேசான கோளமாயுள்ளது. அதுபற்றி ஆங்குள்ளோரும் அந்தரத்தில் சஞ்சரிக்கும் லகுதேகிகளாக (லேசான கனமில்லாத உடல்வாகுடன்) இருப்பார்களாம். அவர்களைத் ‘தேவகணத்தினர்’ என்பது புராணமதம். பிருகஸ்பதி மண்டலம் புராணங்களிலே ரதம் எனப்படும். அதனைச் சூழ்ந்துள்ள மண்டலங்களைப் புராணங்கள் வெண்ணிறக் குதிரைகளாக உருவகம் பண்ணிக் கொள்ளும். ஐரோப்பிய வானசாஸ்திரிகள் அவைகளைச் சந்திரர் என்பார்கள். அம்மண்டலங்களின் தொகையை புராணங்கள் எட்டென்பர். ஐரோப்பியர் அவைகளை ஐந்தென்பர்.

 

பாணினி: இவர் சமஸ்கிருதத்தின் தந்தை;

பாணினி: இவர் சமஸ்கிருதத்தின் தந்தை; 

இவர் 4000 வருடங்களுக்கு முன்னே காந்தார தேசத்தில் ‘சலாதுரய நகரத்திலே பிறந்தவர்.  இவரின் தந்தையார் பெயர் ‘பணினி’ என்பர். தாயார் பெயர் ‘தாக்ஷி’ என்பது. தாக்ஷி புத்திரரெனவும் இவர் வழங்கப்பட்டார்.

இவர் சிறுவயதில் பள்ளி செல்லும் காலத்தில் மந்தபுத்தி (மிகக் குறைந்த அறிவுத்திறன்) உடையவர். எனவே இவரை இவரின் குருவும், உடன் படிக்கும் மற்ற மாணவர்களும் அவமானப் படுத்தி வந்தனர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாணினி, ஒருநாள், தனது வீட்டுக்குச் செல்லாமல், நேராக இமயமலையை நோக்கி நடந்து, அங்கே சிவனை நோக்கித் தவங்கிடந்தார். இவரின் நோக்கத்தை அறிந்த சிவனும் இவருக்கு சகல சாஸ்திரங்களுக்கும் மூலசாஸ்திரமாகிய ‘மகேஸ்வர சூத்திரோபதேசம்’ இவைகளை வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட பாணினி அந்தக் கலைகளெல்லாம் வல்லவராயினார்.

இவர் அந்த ‘மகேஸ்வர சூத்திரங்களை’ ஆதாரமாகக் கொண்டு செய்த சமஸ்கிருத வியாகரணம் ‘பாணினீயம்’ எனப்படும். இது எட்டு அத்தியாயங்களை உடையதால் ‘அஸ்டாத்தியாயி’ எனவும் பெயர் பெறும். பாணினீயம் என்னும் சம்ஸ்கிருத வியாகரணம் 3990 சூத்திரங்களை உடையது.

இவரும் வரருசியும் ஒரேகாலத்தவர். பாணினி பகவான் வியாகரணம் செய்யுமுன்னே வரருசி காதந்திரம் என ஒரு இலக்கணம் வகுத்தாரேனும், பாணினி பகவான் செய்தருளிய நூலே சிறந்ததெனக் கண்டு அதற்குத் தாம் ஒரு உரை இயற்றினார். அவரே பாணினீயத்துக்கு முதல் உரையாசிரியர்.

பாணினீயத்துக்கு மிக விரிந்ததொரு உரை செய்தவர் பதஞ்சலி பகவான். அது மிகுந்த விரிவான விளக்கங்களுடன் இருந்ததால், அதற்கு ‘மஹாபாஷியம்’ என்னும் பெயர் வந்தது. பதஞ்சலி பகவான் தாம் இயற்றிய பாஷியத்திலே ‘இச்சூத்திரங்களின் பெருமையை நோக்குமிடத்து, பொருளில்லாத ஒரு எழுத்தையேனும் அவற்றினுள்ளே யான் காண்கிலேன்’ என்று கூறியுள்ளார். ஐரோப்பிய பண்டிதர்களும் தான் கண்ட பாஷைகளில் பாணினீயத்துக்கு இணையான இலக்கணம் ஒன்றில்லை என்று பாராட்டி உள்ளனர்.

பாணினீயத்துக்கு முன்னரும் ஐந்திர முதலிய வியாகரணங்கள் பல தோன்றி நடைபெற்றனவேனும், அவையெல்லாம் அது தோன்றிய பின்னர் கற்றல் எளிதல்ல என்று அக்காலத்து மக்களால் கைவிடப் பட்டன. ஆகவே பாணினீயமே நின்று நிலவுவதாயிற்று.

அது வேத-மொழிக்கும் சாமானிய மொழிக்கும் இலக்கணம் கூறுவது. பூர்வ வியாகரணங்கள் எல்லாம் வேத மொழிக்கே இலக்கணம் கூறுவன. பாணினீயம் இரண்டுக்கும் கூறுவதால் மிகச் சிறப்பானதாயிற்று. அதுமற்றுமன்றி அது பூர்வ வியாகரணங்களைப் போல வேதத்திற்கும் அங்கமாயிற்று.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த வியாகரணம் செய்த பாணினியின் பிறந்த காலம் 2000 வருடங்களுக்கு முன்னதென்பர்.

பாணினீயத்துக்கு உள்ளே வரும் யவனபதம் (யவன வார்த்தை) கிரேக்கரைக் குறிப்பதென்பது சிலரின் கருத்து. அவ்வாறு கிரேக்கரை குறிக்கவில்லை என்பது கௌதம தருமசூத்திரம், மனு, ராமாயணம், பாரதம், காசிகாவிருத்தி, முதலியவற்றின் உள்ளே கூறப்படும் யவன வரலாற்றால் பெறப்படும்.

ராமாயணம், ‘யவனராவார், சகரனாலே விசுவாமித்திரரது ஆணைப்படி முண்டிதஞ் செய்து ஓட்டிவிடப்பட்ட க்ஷத்திரியர்’ என்று கூறும். பாரதம், ‘யவனர், துர்வசுவினது சந்ததியராவர்’ என்று கூறும். காசிவிருத்தியும், விஷ்ணுபுராணமும், ‘யவனர், தனது தலையை முண்டிதஞ் செய்து கொள்பவர்கள் (தலையை மொட்டையடித்துக் கொள்பவர்கள்)’ என்றும் கூறும்.

கிரேக்கரோ தமது தலையை மழித்துக் கொள்ளும் பழக்கமுள்ளவர்கள் அல்லர். இது கிரேக்கனாகிய ‘தெமொஸ்தனெஸ்’ (Demosthenes) என்பவன்தான், தான் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக, தனது தலையை மழித்துக் கொண்டு ஓர் அறையின் உள்ளே மறைந்திருந்து நூல் ஓதி வந்தான் என்பதால் இது நன்கு புலப்படும்.

ஆதலின் பாணினி குறித்த யவனரும் வேறு. ஐரோப்பிய பண்டிதர் குறிக்கும் யவனவரும் வேறென்பது உண்மையே.

ஆதலின், கிரேக்கர் படையெடுத்து ஆரியவர்த்தத்தைத் தாக்கிய பின்னர் பாணினி விளங்கினார் என்னும் கொள்கை ஏற்புடையதன்று.

பௌத்தர் கொள்ளும் பொருளும் வேறென்பது பாணினி பாஷ்யத்துள்ளே பதஞ்சலியார் எடுத்துக் கூறும், “தீபங்காற்றினால் நிர்வாணமுற்றது” என்பது போன்ற உதாரணங்களால் விளங்கப்படும்.

பாணினி தான் செய்த வியாகரணத்தை காஷ்மீர தேசத்து அரசனான ‘காநிஷ்க மகாராஜன்’ சபையிலே அரங்கேற்றித் தம்மை முன்னர் அவமதித்த புலவர்களை யெல்லாம் வாதத்திலே வெற்றி கொண்டு கலையெல்லாம் முற்ற உணர்ந்த பெரும் பண்டிதரென்று திசையெல்லாம் போற்ற விளங்கினார்.

இவரின் திருஉருவத்தை சிலையில் அமைத்துப் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தவனாகிய காநிஷ்கராஜன், சந்திரகுப்தனுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே அரசு செய்தவன். இதனாலும், பாணினி முனிவரின் காலம் 4000 வருடங்களுக்கும் முந்தையது என்பதைக் காணலாம். பாணினி முனிவரின் சரித்திரம் ‘கதாசரித் சாகரம்’ என்னும் நூலிலும் அதற்கு முதல் நூலாகிய ‘பிருகத் கதையிலும்’ கூறப்பட்டுள்ளது.

 

பரிமேலழகர்

பரிமேலழகர்

திருக்குறளுக்கு உரை எழுதியவர். இவர் காஞ்சிபுரத்திலே வைஷ்ணவ குலத்தில் பிறந்து வடமொழி தென்மொழி இரண்டிலுமே வல்லவராக விளங்கியவர். இவர் பாண்டி நாட்டில் பிறந்தவர் என்றும் சிலர் சொல்வர்.

தொண்டைமண்டல சதகத்தில், ‘வள்ளல். . . .. . .திருக்காஞ்சிவாழ் பரிமேலழகன் வள்ளுவனார்க்கு வழிகாட்டினான் றொண்டைமண்டலமே’ என்ற பாடலால் இவர் தொண்டை மண்டலத்தை சேர்ந்தவர் என்ற இவ்வுண்மை விளங்கும்.

வள்ளுவர் குறளுக்கு உரைசெய்தோர் பதின்மர். அவருள்ளே சிறந்தவர்கள் நச்சினார்கினியரும் பரிமேலழகருமே.

இவ்விருவருள்ளே பரிமேலழகர் உரையே சிறந்தது.

வள்ளுவர் குறளுக்கு உரை செய்த பதின்மருள், முற்பட்டவராகிய தருமர் ஆருகதர். அவரை ஆருகதர்கள் தருமசேனர் என்பர். அவர் உரைத்த உரையிலே பெரும்பாலும் ஆருகத மதத்தின் கொள்கைகளே காணப்பட்டதால் மற்றவர்களும் அவரவர் மதக் கொள்கைகளையே பிரசங்கித்தனர்.

நச்சினார்கினியரே திருக்குறளைப் பொதுநூலாகக் கொண்டு நடுநிலை கலங்காமல் உரை செய்தவர்.

ஆனாலும் மற்ற ஒன்பது பேரின் உரையும் சரியானது அல்ல எனத் துணிந்து, பரிமேலழகர் உரை செய்யப் புகுந்தார் என்பர்.

பரிமேலழகர் மிகுந்த யோகப் பயிற்சி உடையவர் என்பதால், ஒவ்வொரு உரை செய்யும்போதும் அவர் சமாதி நிலையில் இருந்தே அதன் மெய்ப்பொருள் கண்டார் என்றும், அவர் பூர்வத்தில் வைஷ்ணவராய் இருந்து பின்னர் சுப்பிரமணிய உபசகர் ஆயினார் என்றும், ஒரு கர்ணபரம்பரை உள்ளது.

மற்றைய சரித்திரம் எவ்வாறாயினும், திருக்குறளின் ஒவ்வொரு சொல்லுக்கும் சமாதி நிலையிலிருந்தே மெய்ப் பொருள் கண்டார் என்பது அவரின் உரையை ஊன்றி நோக்கும்போது நம்பத்தக்கதாகின்றது.

இவர் உரை 1200 வருஷங்களுக்கு முன் செய்யப்பட்டது.