அத்வைதம் (Advaida)

அத்வைதம் (அத்துவைதம்):

இது ‘பிரம்மம் அன்றி வேறில்லை’ என்ற கொள்கையை சிந்தாந்தமாகக் கொண்ட வேதாந்த மதம். பிரம்மம், அவித்தை என இரண்டு நிலை. அவற்றுள், பிரம்மம் என்பது சத்தியம், ஞானநந்தாத்மகம், நிர்விகாரம், நிர்வயம், நித்தியம், நிர்த்தோஷம், விபு என ஏழு லக்ஷணங்களை உடையது. அவித்தை என்பது அபாரமார்த்திகம், சதசத்துவிலக்ஷணம், சடம், சவிகாரம், சாவயனம், அநாதிசாந்தம், அஞ்ஞானரூபம் என ஏழு லக்ஷணங்களை உடையது. பஞ்சபூதங்கள் அவித்தையுடைய காரியங்கள். அவற்றின்றும் திரிகுண கலவையாகி சத்துவ குணத்தின் கூறாகிய ஞானேந்திரியம் ஐந்தும் அந்தக்கரணம் நான்கும் உண்டாகின்றன. ரசசால் கன்மேந்திரியங்கள் ஐந்தும் பிராணன் ஐந்தும் உண்டாகின்றன. இவையெல்லாம் சூக்குமதேக காரணம். தமோ குணத்தின் கூறாகிய அபஞ்சீகிருத பூதங்களினாலே பஞ்சீகிருத பூதங்கள் உண்டாம். இவையே ஸ்தூல தேகமாம். பிரபஞ்ச நாசம் பிரளயம் எனப்படும். மோக்ஷ சாதனம் எனப்படுவது ‘நித்தியா நித்திய வஸ்து விவேகம் விஷயபல வைராக்கியம் முமூட்சுதுவம்’  என்பன. இவற்றால் ‘பிரம்மம் தவிர வேறில்லை’ என காண்பது மோக்ஷம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s